திருப்பூர்: கார் மீது சரக்கு வேன் மோதி விபத்து - 2 பெண்கள் படுகாயம்...!


திருப்பூர்: கார் மீது சரக்கு வேன் மோதி விபத்து - 2 பெண்கள் படுகாயம்...!
x
தினத்தந்தி 21 April 2022 9:30 AM IST (Updated: 21 April 2022 9:28 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே கார் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காங்கேயத்தில் இருந்து கோவை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே பல்லடத்தில் இருந்து பொங்கலூர் நோக்கி சென்ற சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில் காரில் வந்த 5 பேரில் 2 பெண்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story