4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்; வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்


4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்; வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 23 April 2022 2:14 AM GMT (Updated: 2022-04-23T07:44:59+05:30)

4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்; வாலிபருக்கு 20 ஆண்டு சிறைதண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சென்னை:

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிளாக் என்ற ஆகாஷ் (வயது 19). கடந்த 2020-ம் ஆண்டு, இவர் அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். 

இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் செம்பியம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாசை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்கும் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஆகாஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story