பிரியாணி திருவிழா சர்ச்சை - விளக்கம் கேட்டு மாநில பட்டியல் இனத்தவர் ஆணையம் நோட்டீஸ்...!


பிரியாணி திருவிழா சர்ச்சை - விளக்கம் கேட்டு மாநில பட்டியல் இனத்தவர் ஆணையம் நோட்டீஸ்...!
x
தினத்தந்தி 12 May 2022 2:31 PM GMT (Updated: 2022-05-12T20:01:09+05:30)

பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு தொடர்பாக விளக்கம் கேட்டு மாநில பட்டியல் இனத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

திருப்பததூர்,

திருப்பத்துா் மாவட்டம் ஆம்பூரில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பிரியாணி திருவிழா நடைபெற இருந்தது.  நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் விழாவில் மக்கள் அனைவரும் வந்து சாப்பிட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா அழைப்பு விடுத்தாா். 

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் கன்னிகாபுரம் என்ற இடத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் இந்த மாபெரும் பிரியாணி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் 30 முதல் 50 ஸ்டால்கள் அமைக்கப்பட்டும். இவற்றில் மட்டன் சிக்கன், மீன் முட்டை பிரியாணி பாஸ்மதி, சீரக சம்பா, ஹைதராபாத் பிரியாணி என 22 சுவையான பிரியாணி சமைக்க உள்ளனர்.

இந்த திருவிழாவில் மாட்டிறைச்சி பிாியாணிக்கு மட்டும் அனுமதி இல்லை என மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.   இதற்கு பல்வேறு அமைப்புகளிடம் இருந்து எதிா்ப்பு எழுந்தது. இந்த நிலையில், கனமழை எச்சாிக்கை காரணமாக பிாியாணி திருவிழா தற்காலிக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அமா்குஷ்வாகா அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி மறுக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு மாநில பட்டியல் இனத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதில், ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி மறுக்கப்பட்டது தீண்டாமைச் செயல் என புகார் கூறப்படுகின்றது. 

தீண்டாமை செயல் கடைப்பிடிக்கப்படவில்லை என்றால் அது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டருக்கு மாநில பட்டியல் இனத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.Next Story