ஓட்டலில் விபசாரம்; ஊழியர் கைது


ஓட்டலில் விபசாரம்; ஊழியர் கைது
x
தினத்தந்தி 12 May 2022 6:37 PM GMT (Updated: 2022-05-13T00:07:12+05:30)

புதுவையில் உள்ள ஓட்டலில் விபசாரம் நடத்திய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

புதுவை காமராஜ் சாலையில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த திருவாரூரை சேர்ந்த கண்ணையன் என்பவரது அறையில் புகுந்த 4 மர்ம நபர்கள் அவர் வைத்திருந்த மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதுதொடர்பாக பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுராந்தகம் பகுதியை சேர்ந்த மணி, அசாருதீன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். கைதான 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது தங்கியிருந்த ஓட்டலில் அழகிகளிடம் உல்லாசம் அனுபவிக்க வந்ததாகவும், அங்கு வேலைபார்க்கும் லெனின் என்பவர் ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்தனர். அந்த நேரத்தில் ஓட்டலில் தங்கியிருந்த கண்ணையனிடம் மடிக்கணினி, செல்போனை பறித்து சென்றதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து  அந்த ஓட்டலில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரம் நடப்பதும், அதற்காக அங்கு பணியாற்றி வந்த ஊழியர் லெனின் பெண்களை அழைத்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து லெனினை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story