மது விற்ற 3 பேர் கைது


மது விற்ற 3 பேர் கைது
x

மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள நடுப்பட்டிபாலம், அய்யர்மலை, ராஜேந்திரம் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. அதன் பேரில் அங்கு சென்ற குளித்தலை போலீசார் அந்தப்பகுதிகளில் மது விற்ற பணிக்கம்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 45), கீழகுட்டபட்டியை சேர்ந்த கணேசன் (65), ராஜேந்திரம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி (60) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து மொத்தம் 17 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story