கஞ்சா விற்ற 3 பேர் கைது
தூத்துக்குடி பகுதியில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி பகுதியில் கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி புதுக்கோட்டை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் 400 கிராம் கஞ்சா, ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 300 வைத்து இருந்தனர்.
உடனடியாக போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் புதுக்கோட்டையை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 31), தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (52) மற்றும் புதியம்புத்தூர் நயினார்புரத்தை சேர்ந்த முருகன் என்ற யமஹா முருகன் (50) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 300-ஐ பறிமுதல் செய்தனர்.