குறி சொல்வதாக ஏமாற்றிய 3 பெண்கள் கைது


குறி சொல்வதாக ஏமாற்றிய 3 பெண்கள் கைது
x

நெல்லை அருகே குறி சொல்வதாக ஏமாற்றிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துர்க்கை ராஜ் மனைவி ராஜலட்சுமி (வயது 30). வீட்டில் தனியாக இருந்த இவரிடம், செய்வினை கோளாறு இருப்பதாக தச்சநல்லூர் கீழக்கரையை சேர்ந்த அந்தோணி மகன் மிக்கேல் (27) கூறியுள்ளார். இதை நம்பி ஏமாந்த ராஜலட்சுமியிடம், மிக்கேல் உள்ளிட்ட 3 பேர் பரிகார பூஜையை ஆரம்பித்துள்ளனர். அப்போது மிக்கேல், தனது கையை பிடித்துக் கொள்ளுமாறு ராஜலட்சுமியை வற்புறுத்தியுள்ளார். அவர் மறுக்கவே கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

தகவல் அறிந்ததும் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தி தீவிரமாக தேடினர். இதில் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தச்சநல்லூர் கீழக்கரையை சேர்ந்த அந்தோணி மகள் ராணி (50), அதே பகுதி ஏசுராஜ் மனைவி தங்கம் (35), வர்கீஸ் மனைவி செல்வம் (37) என்பதும், 3 பேரும் குறி சொல்வதாக ஏமாற்றி வசியம் செய்யும் கும்பலில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார் மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய வர்க்கீஸ் (45), ஏசுராஜ் (48), மிக்கேல் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.


Next Story