கைதான பெண் உள்பட 4 பேர் சிறையில் அடைப்பு


கைதான பெண் உள்பட 4 பேர் சிறையில் அடைப்பு
x

ரூ.15 கோடி போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான பெண் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமநாதபுரம்

பனைக்குளம்

ரூ.15 கோடி போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான பெண் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

6 கிலோ போதை பொருள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை பகுதியில் உள்ள சேது ராஜா என்பவருக்கு சொந்தமான வீட்டில் பதுக்கிய 6 கிலோ ஐஸ் போதை பவுடர் நேற்று முன்தினம் பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச அளவில் ரூ.15 கோடி மதிப்புடையதாக கூறப்படும் இந்த கடத்தல் போதை பொருள் தொடர்பாக வேதாளை பகுதியைச் சேர்ந்த நாககுமார், சக்திவேல், பாக்கியராஜ் மற்றும் இந்த பவுடரை வீட்டில் வைப்பதற்கு உடந்தையாக இருந்த நாககுமாரின் தாயார் மாரியம்மாள் (வயது 46) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

4 பேரும் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாரியம்மாள் பரமக்குடி சிறையிலும், மற்ற 3 பேரும் ராமநாதபுரம் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

ஏற்கனவே 2 முறை

கைதானவர்களிடம் உளவுப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்து உள்ளது. இதில் கைதான 3 ஆண்களும் பணத்துக்காக வேலை செய்பவர்கள் தான். சென்னையில் இருந்து இந்த ஐஸ் போதை பவுடரை குறிப்பிட்ட சில நபர்கள் இவர்களிடம் கொடுத்து விடுவார்கள். அந்த பவுடரை படகில் கடத்தி கொண்டு சென்று, நடுக்கடலில் சில நபர்களிடம் கொடுத்து விட்டு வந்து விடுவார்கள்.

அதற்காக இவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை கொடுத்துள்ளனர். அதுபோல் ஏற்கனவே இதுபோன்று 2 முறை ஐஸ் போதை பவுடர் மற்றும் பீடி இலை உள்ளிட்ட பொருட்களை கடத்தி சென்றிருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Related Tags :
Next Story