56 கிராம மக்கள் சொந்த ஊர் திரும்பினர்


56 கிராம மக்கள் சொந்த ஊர் திரும்பினர்
x

சிவகாசி அருகே குலதெய்வ வழிபாட்டிற்கு வந்த 56 கிராம மக்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே குலதெய்வ வழிபாட்டிற்கு வந்த 56 கிராம மக்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.

குலதெய்வ வழிபாடு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 56 கிராமத்தை சேர்ந்தவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிவகாசி அருகே உள்ள எம். புதுப்பட்டி கூடமுடையார் கோவிலுக்கு குலதெய்வ வழிபாட்டிற்காக வந்து செல்வது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பாதிப்பு இருந்ததால் அவர்கள் குலதெய்வ வழிபாட்டிற்கு வரவில்லை. இந்தநிலையில் கடந்த வாரம் கமுதியில் இருந்து 1,500 குடும்பத்தை சேர்ந்த 5 ஆயிரம் பேர் மாட்டு வண்டிகள் மற்றும் சரக்கு வாகனங்களில் சிவகாசியை அடுத்த எம். புதுப்பட்டிக்கு வந்தனர். இவர்கள் கூடமுடையார் கோவில் அருகே கூடாரம் அமைத்து 1 வாரம் தங்கி இருந்து குலதெய்வ சாமியை வழிபட்டனர்.

சொந்த ஊருக்கு திரும்பினர்

இன்ஸ்பெக்டர் திலகராணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில நேற்று காலை 56 கிராமத்தை சேர்ந்தவர்களும் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு குடும்பம், குடும்பமாக சொந்த ஊருக்கு திரும்பினர்.

இவர்கள் வளர்த்துக் கொண்டு வந்த ஆடுகளை எம். புதுப்பட்டி அருகே உள்ள கிராமங்களில் பொது இடங்களில் சமைத்து உறவினர்களுடன் இணைந்து சாப்பிட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினர். 2 நாட்கள் பயணத்துக்கு பின்னர் 56 கிராம மக்களும் தங்களது சொந்த ஊருக்கு சென்று சேர்வார்கள்.


Next Story