குமரி மேற்கு கடலோர பகுதியில் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை


குமரி மேற்கு கடலோர பகுதியில்  61 நாட்கள் மீன்பிடிக்க தடை
x

வருகிற 1-ந் தேதி முதல் குமரி மேற்கு கடலோர பகுதியில் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

வருகிற 1-ந் தேதி முதல் குமரி மேற்கு கடலோர பகுதியில் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடிக்க தடை

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020-ன் கீழ் தமிழகத்தின் மேற்கு கடலோர பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாத்திடும் பொருட்டும் வருகிற 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடிப்பதற்கு ஆண்டுதோறும் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

எனவே நடப்பாண்டிலும் குமரி மாவட்ட மேற்கு கடலோர பகுதிகளில் வருகிற 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரை மீனவர்கள் மீன்பிடி விசைப்படகுகள், இழுவைப்படகுகள் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு 61 நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

நடவடிக்கை எடுக்கப்படும்

தடையை மீறி மீன்பிடித் தொழில் புரியும் மீன்பிடி விசைப்படகுகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story