பிளஸ்-1 உயிரியல் தேர்வினை 7,016 பேர் எழுதினர்


பிளஸ்-1 உயிரியல் தேர்வினை 7,016 பேர் எழுதினர்
x

பிளஸ்-1 உயிரியல் தேர்வினை 7,016 பேர் எழுதினர். 234 பேர் வரவில்லை.

விருதுநகர்


பிளஸ்-1 உயிரியல் பாடத்தேர்வினை 7,016 பேர் எழுதினர். 234 பேர் வரவில்லை.

உயிரியல் பாடத்தேர்வு

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிளஸ்-1 பொதுத்தேர்வில் 5,648 மாணவர்களும், 8,261 மாணவிகளும் ஆக மொத்தம் 13,909 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 5,224 மாணவர்களும், 7,969 மாணவிகளும் ஆக மொத்தம் 13,193 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். 422 மாணவர்களும், 292 மாணவிகளும் ஆக மொத்தம் 714 பேர் தேர்வு எழுத வரவில்லை.

உயிரியல் பாடப்பிரிவில் 2,860 மாணவர்களும், 4,390 மாணவிகளும் ஆக மொத்தம் 7,250 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 2,724 மாணவர்களும், 4,292 மாணவிகளும் ஆக மொத்தம் 7,016 பேர் தேர்வு எழுதினர். 136 மாணவர்களும், 98 மாணவிகளும் ஆக மொத்தம் 234 பேர் தேர்வு எழுத வரவில்லை.

வரலாறு

தாவரவியல் பிரிவு பாடத்தில் 724 மாணவர்களும், 1,600 மாணவிகளும் ஆக மொத்தம் 2,324 பேர் எழுத வேண்டிய நிலையில் 635 மாணவர்களும் 1,537 மாணவிகளும் ஆக மொத்தம் 2,172 பேர் தேர்வு எழுதினர். 191 மாணவர்களும் 124 மாணவிகளும் ஆக மொத்தம் 315 பேர் தேர்வு எழுத வரவில்லை. வரலாற்று பாடப்பிரிவில் 1,780 மாணவர்களும், 1,752 மாணவிகளும் ஆக மொத்தம் 3,532 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 1,589 மாணவர்களும் 1,628 மாணவிகளும் ஆக மொத்தம் 3,217 பேர் தேர்வு எழுதினர். 191 மாணவர்களும் 124 மாணவிகளும் ஆக மொத்தம் 315 பேர் தேர்வு எழுத வரவில்லை.

4 பேர் வரவில்லை

வணிக மேலாண்மை மற்றும் புள்ளியியல் பிரிவில் 169 மாணவர்களும், 341 மாணவிகளும் ஆக மொத்தம் 510 தேர்வு எழுத வேண்டிய நிலையில் 167 மாணவர்களும், 338 மாணவிகளும் ஆக மொத்தம் 505 பேர் தேர்வு எழுதினர். 2 மாணவர்களும், 3 மாணவிகளும் ஆக மொத்தம் 5 பேர் தேர்வு எழுத வரவில்லை.

வணிக கணிதம் மற்றும் பொருளியல் பாடப்பிரிவில் 34 மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 30 பேர் தேர்வு எழுதினர். 4 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. மேற்கண்ட தகவலை மாவட்ட பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story