கஞ்சா விற்ற வாலிபா் கைது


கஞ்சா விற்ற வாலிபா் கைது
x
தினத்தந்தி 7 April 2023 6:45 PM GMT (Updated: 7 April 2023 6:46 PM GMT)

கஞ்சா விற்ற வாலிபா் கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் வினைத் (வயது 24) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ஒரு கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story