கோவில் ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா


கோவில் ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா
x

கோவில் ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா

திருவாரூர்

திருமக்கோட்டையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ஞானபுரீஸ்வரர், ரங்கநாத பெருமாள், மேல்நத்தம் மகாமாரியம்மன் கோவில் மற்றும் ஒரு கால பூஜைக்குரிய கோவில்களில் பணியாற்றும் குருக்கள், ஓதுவார்கள், அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு அரசு சார்பில் புத்தாடை வழங்கும் விழா திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருமக்கோட்டை கிராம கமிட்டி தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். இதில் கோட்டூர் ஒன்றிய தி.மு.க.தெற்கு செயலாளர் வி. எஸ். ஆர். தேவதாஸ், மாவட்ட கவுன்சிலர் கலைவாணி மோகன், ஊராட்சி செயலர் கோவிந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டு கோவில் ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கினர். முடிவில் கோவில் அலுவலக ஊழியர் சிவா நன்றி கூறினார்.


Related Tags :
Next Story