கரூர் மாவட்டத்தில் நடந்த மாபெரும் சிறப்பு முகாம்


கரூர் மாவட்டத்தில் நடந்த மாபெரும் சிறப்பு முகாம்
x

கரூர் மாவட்டத்தில் நடந்த மாபெரும் சிறப்பு முகாமில் 34 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரூர்

தடுப்பூசி முகாம்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்து இருந்த நிலையில் தற்போது தினமும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொது சுகாதாரத்துறையின் மூலம் தடுப்பு நடவடிக்கைகளும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால், தொற்றில் இருந்து பாதுகாக்கவும், மீண்டும் பரவி வரும் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள தகுதி வாய்ந்த அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி எளிதில் கிடைத்திடும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த தமிழக அரசால் உத்தரவிடப்பட்டிருந்தது.

அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் 31-வது மாபெரும் தடுப்பூசி முகாம் 1,905 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமில் முதல் தவணை தடுப்பூசியினை 1,629 பேரும், 2-வது தவணை தடுப்பூசியினை 26 ஆயிரத்து 287 பேரும், பூஸ்டர் தடுப்பூசியினை 6 ஆயிரத்து 321 பேரும் என மொத்தம் 34 ஆயிரத்து 237 பேர் செலுத்தியுள்ளனர்.

நொய்யல்

நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, குளத்துப்பாளையம் அரசு துவக்கப்பள்ளி, வேட்டமங்கலம் அரசு ெதாடக்கப்பள்ளி, குந்தாணிபாளையம் அரசு ெதாடக்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் சுகாதார குழுவினர் கலந்து கொண்டு, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போட்டனர். மேலும் சிலருக்கு வீடுகளுக்கே சென்றும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம் காந்தியார் ஊராட்சி தொடக்கப்பள்ளி, அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி,தளவாப்பாளையம் ஊராட்சி நடுநிலைபள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமில் ஒலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சாந்தி, கிராம சபை சுகாதார செவிலியர் லதா ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.


Next Story