மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் ஆச்சார்ய அபிஷேகம் தீட்சை
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் ஆச்சார்ய அபிஷேகம் தீட்சை
திருவாரூர்
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் ஆச்சார்ய அபிஷேகம் தீட்சை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்டலங்கார, ராஜா வள்ளல், செண்பகவள்ளல், ராஜகோபால் வள்ளல் ஆகிய குடும்பத்தினரை சேர்ந்த 6 பேருக்கு ஆச்சார்யா அபிஷேகம் நடைபெற்றது. இதனை கோவிலில் உள்ள முக்கிய பெரிய தீட்சிதர்கள் நடத்தி வைத்தனர். இதில் ஸ்ரீராமன்தீட்சிதர், பிரசன்னா தீட்சிதர், செல்லப்பாதீட்சிதர், பத்ரிதீட்சிதர், கல்யாணம்தீட்சிதர், ரவிதீட்சிதர், ஜெகன்தீட்சிதர், ரகுதீட்சிதர், ஸ்ரீ வித்யாசாகர்தீட்சிதர் முதலிய தீட்சிதர்களும், திருக்குடந்தை நாங்கூர் அண்ணன் கோவில் திருவிளத்தூர் தீட்சிதர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் கோவில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் கோவில் அலுவலர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக தம்பி தீட்சிதர் வரவேற்றார்.
Related Tags :
Next Story