கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

தமிழகத்தில் கூடுதல் கட்டமண் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேல்முருகன் கூறினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தமிழகத்தில் கூடுதல் கட்டமண் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேல்முருகன் கூறினார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தூத்துக்குடியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வலுவான சட்டம்

தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என்று விலை மதிப்பற்ற மனித உயிர்கள் தொடர்ச்சியாக பலியாகி கொண்டிருக்கிறது. ஏற்கனவே தமிழக அரசு ஒரு சட்டம் இயற்றி அந்த சட்டம் சரியாக இயற்றப்படவில்லை என்று உயர் நீதிமன்றம் ரத்து செய்த காரணத்தினால் இதுவரையில் தமிழக அரசால் இதற்கு தடை விதிக்க முடியவில்லை.

ஆதலால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை அவசர சட்டமாக கொண்டு வந்து கவர்னரின் ஒப்புதல் பெற்று கோர்ட்டு ரத்து செய்ய முடியாதபடி வலுவான சட்டமாக இயற்றி அமல்படுத்த வேண்டும்.

வழக்கு தொடரலாம்

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும். மணல் மாபியாக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மணல் குவாரிகளை தனியாருக்கு ஏலம் விடுகின்றபோது பொதுப்பணித்துறை முறையாக அதை கண்காணிக்க வேண்டும்.

பா.ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசு மீது ஊழல் புகார் சுமத்தி வருகிறார். அவர் புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் கோர்ட்டில் வழக்கு தொடரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story