போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்
போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வடக்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் பாலு முன்னிலை வகித்தார். இதில் மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியஅய்யர், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் சிவசங்கர், கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் மணிகண்டன், நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story