வேளாண் துறை பிரசார வாகனம்


வேளாண் துறை பிரசார வாகனம்
x

வேளாண் துறை பிரசார வாகனம்

திருப்பூர்

வெள்ளகோவில்.

வெள்ளகோவில் அருகே உள்ள அய்யனூரில் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறையின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஊட்டச்சத்து மிக்க தானியம் சாகுபடி பற்றிய குறிப்புகளை விவசாய பெருமக்களிடம் வாகனங்கள் மூலம் பிரச்சாரம் செய்யும் நிகழ்ச்சியினை திருப்பூர் மாவட்ட திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை ஏ.லட்சுமணன் தலைமையில், தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்தார். இந்த பிரச்சார வாகனம் வெள்ளகோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன், வேளாண்மை உதவி இயக்குனர் பொன்னுசாமி, திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் ராசி கே.ஆர்.முத்துகுமார், ஒன்றிய செயலாளர் மோளக்கவுண்டன்வலசு கே. சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், திமுக நிர்வாகிகள் வி.சிவக்குமார், யு.பி.அழகரசன், அருள்மணி, தண்டபாணி உட்பட கட்சி பிரமுகர்கள், பாசன சங்க தலைவர்கள், விவசாயிகள் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.



Next Story