அதிமுக வேட்பாளர் தேர்வு: எனக்கு எந்த சுற்றறிக்கையும் வரவில்லை - மைத்திரேயன் ஆதங்கம்


அதிமுக வேட்பாளர் தேர்வு: எனக்கு எந்த சுற்றறிக்கையும்  வரவில்லை - மைத்திரேயன் ஆதங்கம்
x

அதிமுக வேட்பாளர் தேர்வில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பொதுக்குழு உறுப்பினராகிய எனக்கு எந்த சுற்றறிக்கையும் வரவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரேயன் கூறியுள்ளார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான சுற்றறிக்கை இதுவரை எனக்கு கிடைக்க பெறவில்லை என முன்னாள் எம்பியும் பொதுக் குழு உறுப்பினருமான மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நான் ஒரு கழக பொதுக்குழு உறுப்பினர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இதுவரை - பிப்ரவரி மாதம் 05 ம் தேதி மாலை 4.11 வரை எனக்கு எந்த சுற்றறிக்கையும் வரவில்லை. இப்படிக்கு டாக்டர் வா. மைத்ரேயன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர், கழக அமைப்புச் செயலாளர், கழக பொதுக்குழு உறுப்பினர் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கடிதத்தை புறக்கணிக்கிறோம் என அவைத்தலைவர் அனுப்பிய கடிதம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ வேட்பாளர் தென்னரசு என தன்னிச்சையாக அறிவித்துள்ளார் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்; பொதுக்குழுதான் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டுமே தவிர, முன் கூட்டியே அவைத்தலைவர் முடிவு செய்வது தவறு என வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர் கூறியுள்ளார்.


Next Story