திருவள்ளூரில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை
திருவள்ளூரில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் நடைபயிற்சி சென்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மூன்று பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது. பாடியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் (54) திருவள்ளூர் அம்மா பேரவை இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
பார்த்திபன் செம்மர கடத்தல் வழக்குகளில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமினில் இருந்து வந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story