பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு - உச்சகட்ட பரபரப்பில் அதிமுக ...!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுசெயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய மனுக்கள் மீது சென்னை ஐகோர்ட்டில் நாளை தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலை எதிர்த்தும், கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் தனித்தனியே தொடர்ந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு கடந்த 22-ம் தேதி விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன்,வைத்திலிங்கம்,ஜேசிடி,பிரபாகர் மனு மீது நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பளிக்க உள்ளார். கடந்த 22-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடமால் ஒத்தி வைத்திருந்தார்.
இந்தநிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கில், சென்னை ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்குகிறது. ஓபிஎஸ், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் மனு மீது உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பளிக்க உள்ளார்.