தி.மு.க. அரசை கண்டித்துஅ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
குறிஞ்சிப்பாடி,
தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி குற்றங்கள் அதிகளவில் நடக்கிறது. இதில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், இவைகளுக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் கடலூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் குறிஞ்சிப்பாடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்கி, பேசினார். குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஷியம் வரவேற்றார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பிரமணியன், மாநில தொழிற்சங்க இணை செயலாளர் சூரியமூர்த்தி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு
ராஜசேகரன், ஒன்றிய செயலாளர்கள் வினோத், கமலக்கண்ணன், வடலூர் நகர செயலாளர் பாபு, குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் ஆனந்த பாஸ்கர் ,கோவை மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு ராதாகிருஷ்ணன், மாவட்ட அவைத் தலைவர் முத்துலிங்கம். பொதுக்குழு உறுப்பினர்சத்யா அன்பு, மாவட்டத் துணைச் செயலாளர் ஞானசெல்விகல்யாண சுந்தரம், நிர்வாகிகள் லோகநாதன், தங்கப்பன் , ரஜினிகாந்த் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.