ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் சாலைமறியல்


ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் சாலைமறியல்
x
தினத்தந்தி 25 Jan 2023 12:15 AM IST (Updated: 25 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர் பகுதிகளைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி. தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக சிவகிரியில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. 240 நாட்கள் பணி புரிந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், எந்த தொழிலில் பணி புரிந்தாலும் ரூ.21 ஆயிரத்துக்கு குறையாத மாத ஊதியம் வழங்க வேண்டும், நல வாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி தாமதம் இல்லாமல் நிதி பயன்களை உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலைமறியல் நடந்தது.

ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் முனியாண்டி, விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வேலு, மாவட்ட துணைத்ல தலைவர் லிங்கத்துரை ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், விவசாய சங்க வட்டார தலைவர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சமுத்திரக்கனி, கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் முருகன், ராயகிரி நகர செயலாளர் சின்னவேல்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாலை மறியல் போராட்டம் நடத்தியதாக 5 பெண்கள் உட்பட 133 பேரை சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.



Next Story