அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வேண்டும்


அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வேண்டும்
x

வாலாஜா ரோடு ெரயில் நிலையத்தில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

வாலாஜா ரோடு ெரயில் நிலையத்தில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம், ராணிப்பேட்டை பாரதி நகரிலுள்ள, மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நாகராஜூ, மாவட்ட ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மாவட்டத்தின் தலைநகராக உள்ள ராணிப்பேட்டைக்கு அருகே வாலாஜா ரோடு ெரயில் நிலையம் உள்ளது. இந்த ெரயில் நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அலுவல் மற்றும் தொழில் நிமித்தமாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். மேலும் அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்தும் மாவட்டத் தலைநகரான ராணிப்பேட்டைக்கு பல்வேறு பணிகள் காரணமாக வந்து செல்கின்றனர்.

நின்று செல்ல வேண்டும்

எனவே அம்மூரில் உள்ள வாலாஜா ரோடு ெரயில் நிலையத்தில், தென்னக ரயில்வே மூலம் இயக்கப்படும் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ெரயில்வே மந்திரி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், தென்னக ெரயில்வே பொது மேலாளர் ஆகியோரை கேட்டுக் கொள்வது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மகளிருக்கென, தனியாக, தமிழ்நாடு அரசுப்ணியாளர் தேர்வாணைய இலவச பயிற்சி மையம் தொடங்கிட அமைச்சர் காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோரை கேட்டுக் கொள்வது. மாவட்டத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து பொய்யான தகவல் கொடுத்து மனையாக மாற்றி அனுமதி பெற்று இருக்கும், மனைகளை ரத்துசெய்ய சென்னையில் உள்ள நகர்ப்புற ஊரமைப்பு துறையை கேட்டு கொள்வது.

பஸ் இயக்க வேண்டும்

நெமிலி ஊராட்சி ஒன்றியம் சயனபுரம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுதல், காஞ்சீபுரத்திலிருந்து திருமால்பூர் வழியாக பனப்பாக்கம் செல்லும் அரசு பஸ் தற்போது திருமால்பூர் வழியாக இயக்கப்படாததால் மாணவர்கள், பொதுமக்கள், நோயாளிகள் சிரமப்படுகின்றனர். மீண்டும் திருமால்பூர் வழியாக இயக்க வேண்டும்.

திமிரி ஊராட்சி ஒன்றியம் காவனூர் கிராமத்தை சுற்றியுள்ள 30 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், காவனூர் கிராமத்தை மையமாக கொண்டு புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story