காதலியை கர்ப்பிணியாக்கி திருமணத்துக்கு மறுத்த என்ஜினீயர் கைது


காதலியை கர்ப்பிணியாக்கி திருமணத்துக்கு மறுத்த என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:15:42+05:30)

கள்ளக்குறிச்சி அருகே காதலியை கர்ப்பிணியாக்கி திருமணத்துக்கு மறுத்த என்ஜினீயர் கைது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது பெண் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் லேப்டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். அதேபோல் சங்கராபுரம் தாலுகா வேளானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராமு மகன் மணி(30). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ராமுவும் அந்த பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது மணி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் கர்ப்பம் அடைந்த அந்த பெண் மணியின் வீட்டுக்கு சென்று தன்னை திருமணம்செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் திருமணம் செய்து கொள்ள மறுத்த மணி தொடா்ந்து தொந்தரவு கொடுத்தால் கொலை செய்து விடுவதாக அந்த பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் மணி, இவரது தாய் சாந்தா, சகோதரிகள் தீபா, வெண்ணிலா ஆகிய 4 பேர் மீதும் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story