விபத்தில் முதியவர் பலி


விபத்தில் முதியவர் பலி
x

சேரன்மாதேவி அருகே விபத்தில் முதியவர் பலியானார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அருகே உள்ள கங்கனாங்குளம் அந்தோணிநகர் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சி (வயது 62). இதே பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருமை ராஜா (32). இருவரும் மோட்டார் சைக்கிளில் சேரன்மாதேவி வந்து விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். அருமை ராஜா மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார். சேரன்மாதேவி - களக்காடு பிரதான சாலையில் தனியார் கல்லூரி அருகே சென்றபோது நாய் குறுக்கே சென்றதால் அருமை ராஜா, மோட்டார் சைக்கிளை வேகமாக நிறுத்தியுள்ளார்.

அப்போது, மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த பேச்சி தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருமை ராஜாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த சேரன்மாதேவி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றனர். பேச்சி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story