மேலும் ஒரு பசு மாட்டை சிறுத்தைகள் கொன்றன


மேலும் ஒரு பசு மாட்டை சிறுத்தைகள் கொன்றன
x

குடியாத்தம் அருகே மேலும் ஒரு பசுமாட்டை சிறுத்தைகள் கடித்த கொன்றுள்ளன. 3 நாட்களில் 2-வது முறையாக சம்பவம் நடந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தம் அருகே மேலும் ஒரு பசுமாட்டை சிறுத்தைகள் கடித்த கொன்றுள்ளன. 3 நாட்களில் 2-வது முறையாக சம்பவம் நடந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சிறுத்தைகள்

குடியாத்தம் வனப்பகுதியில் ஆறு ஜோடி பெரிய சிறுத்தைகளும், குட்டிகளும் என 25-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

சிறுத்தைகள் வனப்பகுதியில் சுற்றி வருவதாகவும் மேலும் கிராம பகுதியை ஒட்டியபடி இரவு நேரங்களில் உலா வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு உப்பிரப்பள்ளி- தட்டப்பாறை கூட்ரோடு ஊத்துமலை அருகே விவசாயி தட்சிணாமூர்த்திக்கு சொந்தமான சிறுத்தைகள் அடித்துக் கொன்றன.

இந்த நிலையில் ஜிட்டப்பள்ளி தடுப்பணை அருகே மோர்தானா காப்புக் காடுகள் பகுதியில் நேற்று காலையில் சேம்பள்ளி ஊராட்சி கொட்டார மடுகு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடாத்திரி தனது பசு மாட்டை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார்.

குடித்த கொன்றன

மாலையில் பால் கறப்பதற்காக பசுமாட்டை தேடிச்சென்றபோது பசுமாட்டை சிறுத்தைகள் கடித்து குதறி கொன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்த குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா, வனவர் நேதாஜி உள்ளிட்ட வனத்துறையினர், கிராம நிர்வாக அலுவலர் செந்தில் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் பசு மாட்டை சிறுத்தை கொன்ற பகுதிக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

3 நாட்களில்2-வது முறையாக பசுமாட்டை சிறுத்தைகள் கடித்து கொன்றுள்ளன. கொட்டாரமடுகு கிராமத்தை ஒட்டியபடி வனப்பகுதி உள்ளதால் மாலை வேலைகளிலே அந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும் இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் நகர்ப்புறத்தில் இருந்து சொந்த கிராமத்திற்கு செல்லும் கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் தொழிலாளர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். எனவே இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க வனத்துறையினர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story