மூலிகை பெயரில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது


மூலிகை பெயரில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது
x

மூலிகை பெயரில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்கள் மாணவர்கள் மத்தியில் கஞ்சா புகைக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கஞ்சா விற்பனையை தடுக்கவும் அதனை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர் களுக்கு கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேரை கைது செய்தனர். தொடர் நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் ஒரு கும்பல் செல்போன் மூலம் சங்கேத வார்த்தைகளில் ஆர்டர் பெற்று வாடிக்கையாளர்களை மறைவிடத்திற்கு வரவழைத்து கஞ்சா பாக்கெட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அந்த கும்பலை சேர்ந்த ஒருவரின் செல்போன் எண்ணை அவரது வாடிக்கையாளரிடம் பெற்று வாடிக்கையாளர் போல தொடர்பு கொண்ட போலீசார் அவரிடம் கஞ்சா கேட்க கஞ்சா வியாபாரி பேசுவது போலீஸ் என்று தெரியாமல் கழ னிவாசல் பகுதிக்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற போலீசாரிடம் போலீஸ் என்று அறியாமலேயே கஞ்சாவை கொடுத்து பணத்தை கேட்க போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். பிடிபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் பேயன்பட்டி ஜீவா நகரை சேர்ந்த முருக பெருமான் (வயது34). எலக்ட்ரீசியன் வேலை பார்ப்பவர் என்பதும், எலக்ட்ரீசியன் வேலையை பகுதி நேரமாகவும் கஞ்சா விற்பனையை முழு நேர தொழிலாகவும் நீண்ட காலமாக செய்து வருவது தெரிய வந்தது. அவருக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.


Related Tags :
Next Story