கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் கைது; 40 கிலோ பறிமுதல்


கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் கைது; 40 கிலோ பறிமுதல்
x

ஆந்திராவில் இருந்து ஆம்னி பஸ்சில் கடத்தி வந்து கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை

ஆந்திராவில் இருந்து ஆம்னி பஸ்சில் கடத்தி வந்து கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா விற்பனை

மதுரையில் கஞ்சா கடத்துபவர்கள் மற்றும் விற்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் நகர் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு கஞ்சா விற்பவர்கள் மீது கைது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திருப்பாலை பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் மதுரை வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் ஆலோசனையின் படி, தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் திருப்பாலை இன்ஸ்பெக்டர் ஈஸ்தர் தலைமையில் தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எஸ்.கொடிக்குளம், பாரத் நகரில் கஞ்சா விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அந்த வீட்டுக்குள் சென்று அங்கு இருந்த 5 பேரை சுற்றி வளைத்தனர்.

5 பேர் கைது

புதூர் மூன்றுமாவடி பரசுராமன்பட்டியை சேர்ந்த டேவிட் என்ற மரிய ஆரோக்கியதாஸ் (வயது 25), கொடிக்குளம் அகஸ்டின் (23), கடச்சனேந்தல் சியாம்சுந்தர் (22), கோச்சடை, நடராஜ் நகர் விக்னேஷ் (23), முருகானந்தம் (22) என்பதும், கஞ்சா விற்றதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 40 கிலோ கஞ்சா, அரிவாள், 2 கத்திகள், 4 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் மரிய ஆரோக்கிய தாஸ் தம்பி மர்வீன்ஜோசை தேடி வருகிறார்கள்.

ஆந்திராவில் இருந்து

விசாரணையில், ஆந்திராவில் உள்ள துளி மாவட்டத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி சூட்கேசில் வைத்து பயணி போன்று ஆம்னி பஸ்சில் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் எதிரிகளை பழிவாங்குவதற்காக பணம் சம்பாதிக்க இந்த தொழில் புதிததாக இறங்கியதும் தெரியவந்தது.

இதே போன்று செல்லூர் போலீசார் ரோந்து சென்றபோது வைகை வடகரை பகுதியில் கஞ்சா விற்ற செல்லூர் கீழத்தோப்பை சேர்ந்த அய்யனார் (23), செல்லூர் அஜித் (22), வீரபிரபு (22) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 3,300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.Next Story