பா.ஜ.க.வினர் கைது


பா.ஜ.க.வினர் கைது
x

இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

சனாதன தர்மத்தை ஒழிப்பதாக பேசிய விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக்கோரியும் நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி தஞ்சை மேல வீதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு பா.ஜ.க. வினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் முரளிகணேசன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பொது செயலாளர்கள் துரை, வீரா, முரளிதரன், மருத்துவ பிரிவு மாநில செயலாளர் டாக்டர் பாரதிமோகன், மாநில நெசவாளர் பிரிவு துணை தலைவர் உமாபதி, பொருளாளர் விநாயகம், உள்பட ஏராளமானார் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பா.ஜ.க. வினர் 75-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story