காரில் வந்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது


அரக்கோணம், சோளிங்கர் பகுதியில் காரில் வந்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணம், சோளிங்கர் பகுதியில் காரில் வந்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரக்கோணம் ரெட்டை குளம் சோதனை சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்தின்பேரில் அந்தவழியாக வந்த காரை நிறுத்தினர். காரில் இருந்த 2 பேர் முன்னுக்கு பின் முரனாக பேசியதால் அவர்களை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் காட்பாடி பகுதியை சேர்ந்தவர்களான சுரேஷ் மகன் ஓம் பிரகாஷ் (வயது 25) மற்றும் வெங்கடேசன் மகன் நிதிஷ்குமார் (19) என்பதும் இவர்கள் காரில் வந்து அரக்கோணம், நெமிலி மற்றும் சோளிங்கர் பகுதிகளில் இருந்து விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து திருட்டிற்கு பயன்படுத்திய கார் மற்றும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை தாலுகா இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.Next Story