சந்தனமரம் வெட்டியவர் கைது


சந்தனமரம் வெட்டியவர் கைது
x

சந்தனமரம் வெட்டியவர் கைது

தர்மபுரி

அரூர்:

மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தன் தலைமையிலான வனக்குழுவினர் அரூர் வனப்பகுதியில் உள்ள ஈ.பி. லைனில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகப்படும்படி மரத்தை வெட்டி கொண்டிருந்த ஒருவரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அரூர் அருகே சித்தேரி மலை வாச்சாத்தி அருகே மல்லான்குட்டை கிராமத்தை சேர்ந்த ராமன் (வயது 48) என்பது தெரியவந்தது. இவர் வெட்டி கொண்டிருந்த மரம் சந்தனமரம் என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த வனத்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


Next Story