செல்போன் திருடன் கைது
மத்திகிரி அருகே செல்போன் திருடன் கைது
கிருஷ்ணகிரி
மத்திகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர உத்தரவிட்டார். அதன் பேரில் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மேற்பார்வையில் மத்திகிரி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிற்றரசு, பூபதி ராமராஜூலு மற்றும் போலீசார் மத்திகிரி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வேலூர் மாவட்டம் உடையராஜ்பாளையத்தை சேர்ந்த திலீப் (வயது 20) என்பதும், செல்போன் மற்றும் பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story