இடப்பிரச்சினையில் பெண் மீது தாக்குதல்; தம்பதி மீது வழக்கு


இடப்பிரச்சினையில் பெண் மீது தாக்குதல்; தம்பதி மீது வழக்கு
x

இடப்பிரச்சினையில் பெண் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

தா.பழூர்:

தா.பழூர் அருகே உள்ள சிலால் நடுத்தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன் மனைவி சங்கீதா(வயது 30). அதே பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து(45). இவர்கள் இருவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சங்கீதாவின் நிலத்தில் மாரிமுத்து தனக்கு சொந்தமான ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, அவற்றை அங்கிருந்து வெளியேற்றும்படி சங்கீதா கூறியுள்ளார். ஆனால் மாரிமுத்து ஆடு, மாடுகளை வெளியேற்றாமல் அங்கேயே மேய்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சங்கீதா வீட்டில் இருந்தபோது மாரிமுத்து மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் ஆகியோர் அங்கு வந்து தகாத வார்த்தைகளால் திட்டி, சங்கீதாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சங்கீதா தா.பழூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மாரிமுத்து, மாரியம்மாள் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தார்.


Next Story