தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில்   திருவிளக்கு பூஜை
x

தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி

ஆடி மாதப் பண்டிகைகளில் மிகவும் விசேஷமான பண்டிகை வரலட்சுமி நோன்பு. ஆகும். மற்ற அம்மன் பூஜைகள் அல்லது நோன்புகள் போல அல்லாமல், வரலட்சுமி நோன்பு அன்று பெண்கள் அம்மனை அழகாக அலங்கரிப்பது முதல் விரதம் இருந்து பூஜை செய்து நோன்பு கயிறு கட்டிக் கொள்வது வரை, ஒவ்வொரு பகுதியையும் மிகவும் பக்தியோடு செய்வார்கள். அத்தகைய சிறப்பு மிக்க வரலட்சுமி நோன்பு தூத்துக்குடி சண்முகபுரம் இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. மேலும் சிறப்பு திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


Next Story