வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
x

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னை,

நாட்டில் தென்மேற்கு பருவமழை விரைவில் விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. தற்போது, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில், அக்டோபர் 22-ந்தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தேனி மாவட்டம், பெரியகுளத்தில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது. மதுரை மாவட்டம், பேரையூரில் 10 செ.மீ., தேனி மாவட்டம் சோத்துப்பாறை, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் தொண்டி பகுதிகளில் தலா 9 செ.மீ. மழை பதிவானது.


Related Tags :
Next Story