இல்லம் தேடி கல்வி மையத்துக்கு சிறந்த குறும்படத்துக்கான விருது
கொள்ளிடம் அருகே அய்யம்பேட்டை இல்லம் தேடி கல்வி மையத்துக்கு சிறந்த குறும்படத்துக்கான விருது வழங்கப்பட்டது
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி சேத்திருப்பு நடுநிலைப்பள்ளிக்கு உட்பட்ட காவல்மானியம், காடுவெட்டி, சேத்திருப்பு, அய்யம்பேட்டை ஆகிய நான்கு மையங்களில் இல்லம் தேடி கல்வி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தன்னார்வலர்கள் ஷர்மிலி,கீர்த்திகா,வர்ஷா,விஷாலி ஆகியோர் மையத்தை நடத்தி வருகின்றனர். இந்த மையங்களில் பிப்ரவரி 27 முதல் மார்ச் 4 வரை குறும்பட கொண்டாட்டம் நடந்தது. இதில் அய்யம்பேட்டையை சேர்ந்த இல்லம் தேடி கல்வி மையத்தின் குறும்படம் மாவட்ட அளவில் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டது இதற்கான விருது வழங்கும் விழா சேத்திருப்பு நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் பாலு மற்றும் தன்னார்வலர் ஷர்மிலி ஆகியோருக்கு குறும்பட கொண்டாட்ட விருதை வழங்கினார். அத்துடன் காசோலை மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார். விழாவில் உதவி திட்ட அலுவலர் ஞானசேகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெய்வமோகன்,மாவட்ட இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, வட்டார மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி,வட்டார இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர், ஆசிரியர் பயிற்றுனர்கள் கவிதா, பாக்கியலட்சுமி,அபூர்வ ராணி மற்றும் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.