பாலாண்ட ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்


ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பாலாண்ட ஈஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை-தஞ்சை மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நெடுவாசல் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்கள நாயகி- பாலாண்ட ஈஸ்வரர் மற்றும் நாடியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையொட்டி திருப்பணி குழு அமைத்து பாலாண்ட ஈஸ்வரருக்கு புதிய ராஜகோபுரம் மற்றும் கோவில் கட்டும் பணியும் மற்ற கோவில்களை புதுப்பிக்கும் பணியும் நடைபெற்றன. 5 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த பணிகள் தற்போது நிறைவடைந்தன.

இதையொட்டி நேற்று காலை 10 மணிக்கு கோவில்களின் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் புதுக்கோட்டை- தஞ்சை மாவட்ட கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story