ரூ.8¼ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்


ரூ.8¼ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்
x

ரூ.8¼ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம் போனது.

ஈரோடு

கடத்தூர்

கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாழைத்தார்கள் ஏலம் நடந்தது. இதற்கு 5 ஆயிரத்து 230 வாழைத்தார்கள் கொண்டு் வரப்பட்டன. இதில் கதலி (கிலோ) ரூ.47-க்கும், நேந்திரன் ரூ.42-க்கும் ஏலம் போனது. பூவன் (தார்) ரூ.440-க்கும் தேன்வாழை ரூ.630-க்கும், பச்சைநாடன் ரூ.400-க்கும், ரொபஸ்டா ரூ.430-க்கும், செவ்வாழை ரூ.700-க்கும், ரஸ்தாளி ரூ.600-க்கும், மொந்தன் ரூ.340-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்துக்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் தேங்காய் ஏலம் நடந்தது. இதற்கு 4 ஆயிரத்து 380 தேங்காய்கள் கொண்டு் வரப்பட்டன. இதில் தேங்காய் ஒன்று 8 ரூபாய் முதல் 14 ரூபாய் 30 காசு வரை என மொத்தம் 50 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது.


Related Tags :
Next Story