புதிய போலீஸ் சூப்பிரண்டாக பாஸ்கரன் பதவி ஏற்பு


புதிய போலீஸ் சூப்பிரண்டாக பாஸ்கரன் பதவி ஏற்பு
x

திண்டுக்கல் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பாஸ்கரன் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

திண்டுக்கல்

இடமாற்றம்

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்தவர் சீனிவாசன். இவர் நெல்லை நகர கிழக்கு துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் திண்டுக்கல் வந்த பாஸ்கரன் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்றுக்கொண்டார். அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தனது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு நெல்லைக்கு புறப்பட்டு சென்றார். அதன் பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் யாரேனும் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் புகையிலை பொருட்கள், லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள், கந்துவடிக்கு பணம் கொடுப்பவர்கள், பெண்களுக்கு எதிராக குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ரவுடிகள் பட்டியலில் இருப்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தால் கைது செய்யப்படுவார்கள். பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இரவு நேர ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும். திண்டுக்கல் மாவட்டத்தை குற்ற சம்பவங்கள் நடக்காத அமைதியான மாவட்டமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story