பந்தலூரில் சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை-போக்சோவில் வாலிபர் கைது
பந்தலூரில் சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை-போக்சோவில் வாலிபர் கைது
பந்தலூர்
பந்தலுர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார். இதனை கவனித்த வாலிபர் ஒருவர், சிறுமியின் வீட்டுக்கு அத்துமீறிய நுழைந்து உள்ளார். பின்னர் அந்த சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். பொதுமக்களை கண்டதும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சித்ரா மற்றும் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தது வயநாடு மாவட்டம் மானந்தவாடியை சேர்ந்த சரவணன் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சரவணனை கைது செய்தனர்.