சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது


சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
x

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் 17 வயதான ஒரு சிறுமி அவளது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தாள். சிறுமி திடீரென மாயமானாள். இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் பார்சம்பேட்டை ஜெயமாதா நகர் பகுதி சேர்ந்த வெங்கடேசன் மகன் பிரபாகரனுக்கு (வயது 22) இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அவர் சிறுமியை காதலித்து வந்ததாகவும் பெற்றோர் எதிர்த்ததால் அவளை சென்னை அருகே வில்லிவாக்கம் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறி பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீசில் தஞ்சம் அடைந்தார். 18 வயதுக்குட்பட்ட சிறுமியை திருமணம் செய்வது குற்றம் என்பதால் சிறுமியை மீட்டு பிரபாகரனை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story