புகழூர் நகராட்சி கூட்டம்


புகழூர் நகராட்சி கூட்டம்
x

புகழூர் நகராட்சி கூட்டம் நடந்தது.

கரூர்

புகழூர் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பிரதாபன் முன்னிலை வைத்தார். நகராட்சி ஆணையர் கனிராஜ் அனைவரையும் வரவேற்றார். புகழூர் நகராட்சியில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது தடை விதிக்கப்பட்டதால் பிளாஸ்டிக் பயன்பாடு இன்றி நெகிழி இல்லா நகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த 139 பேர் முதியோர் உதவித்தொகை மற்றும் ஏனைய உதவித்தொகை வழங்கக்கோரி கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தினை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் சேர்த்தல், குடிநீர் வினியோக பராமரிப்பு பணிக்கு ஆண்டுக்கு தேவையான தளவாட பொருட்கள் ரூ.9.50 லட்சத்திற்கு கொள்முதல் செய்யும் ஒப்பந்தப்புள்ளி கோருதல் என்பன உள்பட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகராட்சி வார்டு கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story