நிம்மியம்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா


நிம்மியம்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா
x

நிம்மியம்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. அண்ணாமலை கவுண்டர், செல்வம் நாடார், ரவிராவ், தேசாய் கோகுல்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய குழு உறுப்பினர் பிரீத்தா பழனி, ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி வெங்கடேசன், துணைத்தலைவர் கே.மணி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பாக அழைப்பாளராக ஜோலார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி கலந்து கொண்டு விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழாவில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த எருதுகளும் கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலம் சித்தூர், குப்பம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் இருந்து 250 காளைகள் பங்கேற்றன.

முன்னதாக எருதுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் வாடிவாசலில் இருந்து காளைகளை அவிழ்த்து விடப்பட்டு ஓடின. இதில் நிர்ணியக்கப்பட்ட இலக்கினை அதிவேகமாக ஓடி கடந்து, முதல் 3 இடங்களை பிடித்த காளைகளின் உரிமையாளர்கள் உள்பட 40 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமையில் வருவாய்த்துறையினர், ஆலங்காயம் வட்டார அலுவலர் பசுபதி தலைமையில் மருத்துவ குழுவும், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் மற்றும் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story