சாலை விபத்தில் ஓட்டல் தொழிலாளி பலி


சாலை விபத்தில் ஓட்டல் தொழிலாளி பலி
x

சாலை விபத்தில் ஓட்டல் தொழிலாளி பலி

திருவண்ணாமலை


சாலை விபத்தில் ஓட்டல் தொழிலாளி பலியானார்.

தென்காசி மாவட்டம் ஊர்மேல் அழகியான் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 58). இவர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று மொபட்டில் செங்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பில் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மாரியப்பனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் இறந்து விட்டார்.

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மார்ட்டின் ஜோசப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story