நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்


நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்
x

ஓசூரில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணய்யா. இவர் நேற்று மாலை காரில் ஓசூர் சிப்காட்டில் இருந்து, தேன்கனிக்கோட்டை நோக்கி சென்றார். மூக்கண்டபள்ளி என்.டிஆர். நகர் அருகே சென்றபோது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணய்யா, காரை நிறுத்தி விட்டு கீழே குதித்து உயிர் தப்பினார். அந்த வழியாக தண்ணீர் ஏற்றிவந்த டிராக்டரை நிறுத்தி அதில் இருந்த தண்ணீரை ஊற்றி காரில் பிடித்த தீயை அணைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story