வாய்க்காலில் கார் பாய்ந்தது
நன்னிலம் அருகே வாய்க்காலில் கார் பாய்ந்தது. அந்த காரில் பயணம் செய்த 6 பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நன்னிலம்;
நன்னிலம் அருகே வாய்க்காலில் கார் பாய்ந்தது. அந்த காரில் பயணம் செய்த 6 பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோவிலுக்கு வந்தனர்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் டி.ஆர். பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அழகரசன்(வயது 40). நேற்று முன்தினம் இவர் தனது மனைவி பூவிழி, தாயார் ரேவதி மற்றும் குழந்தைகள் சூரிஸ்வரன், சிவரஞ்ஜினி மற்றும் உறவினரான இளமதி ஆகியோருடன் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதசாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார்.காரை அழகரசன் ஓட்டி வந்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் அவர்கள் மீண்டும் காரில் புறப்பட்டு காரைக்கால் நோக்கி சென்றனா்.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
நன்னிலம் அருகே சிகார்பாளையம் என்ற இடத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அழகரசனின் கட்டுப்பாட்டை இழந்த கார், திடீரென ரோட்டோரம் உள்ள வடக்குடி வாய்க்காலில் பாய்ந்தது. உடனே காரில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிவந்து காரில் இருந்தவர்களை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்தில் காயமடைந்த அனைவரும் நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனா்.இது குறித்து நன்னிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாய்க்காலில் குறைந்த அளவே தண்ணீர் இருந்ததால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.