அ.ம.மு.க.வினர் மீது வழக்கு


அ.ம.மு.க.வினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அ.ம.மு.க.வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மே தினத்தையொட்டி கடந்த மே 1-ந் தேதி அ.ம.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை கழக பேச்சாளரான பாண்டியன் என்பவர் கலந்து கொண்டு தி.மு.க. கட்சி குறித்து அவதூறாக பேசி ஆபாசமான பாடல்களை பாடியும், மிரட்டல் விடுத்தும் தி.மு.க. தலைவர்களை அவமரியாதையாக பேசினாராம். மேலும், தி.மு.க.வுக்கு செல்பவர்களை கொலை மிரட்டல் விடுக்கும் தொணியில் பேசினாராம். இதுகுறித்து மாவட்ட போலீஸ் தனிப்பிரிவு சுருக்கெழுத்தாளரான தினேஷ்பாபு கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் மேற்கண்ட பாண்டியன் மற்றும் கூட்டம் ஏற்பாடு செய்த முனியசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story