கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்குப்பதிவு


கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்குப்பதிவு
x

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கரூர்

தோகைமலை,

தோகைமலை அருகே உள்ள பழனி கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பாலுதாஸ் (வயது 67). இவரது மனைவி மீனா. சின்னமனூர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி நிர்மலா. நிர்மலா மீனாவின் தங்கை ஆவார். இதனால் நிர்மலா வீடு கட்டுவதற்கு பாலுதாஸ் பணம் கொடுத்துள்ளார். பின்னர் பாலுதாஸ் தான் கொடுத்த பணத்தை நிர்மலாவிடம் திருப்பி கேட்டபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், சம்பவத்தன்று பாலுதாஸ் வீட்டிற்கு வந்த முருகன்-நிர்மலா தம்பதி பாலுதாஷிடம் தகராறு செய்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் முருகன்-நிர்மலா தம்பதி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story