தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
x

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னை,

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்தது. இந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். நாளை முதல் வருகிற 27-ந் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், 28-ந் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், சுருளக்கோடு 11 செ.மீ., பெருஞ்சாணி அணை 10 செ.மீ., வேடசந்தூர், புத்தன் அணை, கல்லிக்குடி தலா 9 செ.மீ., ஒகேனக்கல், பாலக்கோடு, புகையிலை நிலையம் தலா 7 செ.மீ., சின்னக்கல்லார், கே.ஆர்.பி.அணை, ஆண்டிப்பட்டி தலா 6 செ.மீ., சின்கோனா, திண்டுக்கல், முக்கடல் அணை, பேச்சிப்பாறை, அரவக்குறிச்சி, பேரையூர், எருமப்பட்டி, மேட்டூர், தென்பரநாடு, வால்பாறை தலா 5 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்து இருக்கிறது.


Next Story